தவிக்கும்  அவுஸ்திரேலிய அணி: புலம்பும் புதிய தலைவர்!

Monday, April 2nd, 2018

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 4வது டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி திணறி வரும் நிலையில் அந்த அணியின் தலைவர் டிம் பெய்னி தவித்து வருகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கேப்டவுனில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அவுஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களான பேன்கிராஃப்ட், வார்னர், அணித்தலைவர் ஸ்மித் ஆகியோருக்கு ஐசிசி தடை விதித்தது.

இதை தொடர்ந்து நடைபெற்று வரும் 4-வது டெஸ்டில் முதலில் விளையாடிய தென் ஆப்ரிக்கா 488 ஓட்டங்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடி வரும் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்களை இழந்து 110 ஓட்டங்கள் மட்டும் எடுத்துள்ளது.

பேன்கிராஃப்ட், வார்னர், ஸ்மித்துக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட மேட் ரென்சாவ், ஜோ பர்ன், பீட்டர் ஹண்ட்ஸ்கோம்ப் ஆகியோர் ஓட்டங்கள் குவிக்க தவறி ஏமாற்றமளித்தனர்.

புதிதாக சேர்க்கப்பட்ட 3 வீரர்கள் சேர்ந்து மொத்தம் 12 ஓட்டங்கள் மட்டும் எடுத்து அணிக்கு இக்கட்டாண நிலையை ஏற்படுத்தியுள்ளனர் இதனால் முன்னணி வீரர்களை இழந்து தவிக்கும் விக்கெட் கீப்பரும் புதிய தலைவருமான டிம் பெய்னி இது குறித்து புலம்பி வருகிறார்.

Related posts: