தவான் வேண்டாம் – இந்திய அணியின் முன்னாள் தலைவர்!

Tuesday, July 31st, 2018

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் ஆரம்ப வீரர்களாக முரளி விஜய் ராகுல் இருவரையுமே களமிறக்க வேண்டும். தவான் வேண்டாம் என்று கருத்துத் தெரிவித்தார் இந்திய அணியின் முன்னாள் தலைவர் கங்குலி.

இங்கிலாந்தை எதிர்கொள்வதற்கு முன்னர் இந்திய அணி எசெக்ஸ{டன் பயிற்சி ஆட்டமொன்றில் விளையாடியது.

இந்த ஆட்டத்தில் தவான் இரண்டு இன்னிங்ஸிலும் டக் அவுட் ஆகி ஏமாற்றினார். இதையடுத்து கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார் கங்குலி:

வெளிநாடுகளில் தவான் டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடவில்லை. அவர் ஓட்டங்களைக் குவித்ததில்லை என்று சாதனைகள் சொல்கின்றன. தென்னாபிரிக்க, இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியா எதுவாக இருந்தாலும் அவர் சரியாக விளையாடவில்லை. தவானைப் பொறுத்தவரை ஒருநாள் ஆட்டத்தில் சிறந்த வீரர். டெஸ்ட் ஆட்டத்தில் அவர் உள்நாட்டில் மட்டுமே தனது திறமையை நிரூபித்துள்ளார். இந்திய மண்ணில் சதம் அடித்ததை வைத்து அவருக்கு அணி நிர்வாகம் வாய்ப்பு வழங்குவது சுவாரசியமே. நானாக இருந்தால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முரளி விஜய், ராகுல் ஆகியோரைத் தான் தொடக்க வீரர்களாக களமிறக்குவேன் என்று கங்குலி மேலும் தெரிவித்தார்.

Related posts: