தவானுக்காக களமிறங்கிய பிரதமர் மோடி!

Friday, June 21st, 2019

உலகக் கோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய ஷிகர் தவானை ஊக்குவிக்கும் வகையில் இந்தியா பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வந்த இந்திய ஆரம்ப ஆட்டகாரர் தவான், கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரிலிருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்தார்.

விலகிய பின்னர், தனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். குறித்த வீடியோவை கண்ட இந்திய பிரதமர் மோடி, தவானுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

மோடி வெளியிட்ட பதிவில், அன்புள்ள தவான், களம் உங்களை இழந்தது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் நீங்கள் விரைவாக மீண்டு வருவீர்கள் என்று நம்புகிறேன், இதனால் நீங்கள் மீண்டும் களத்தில் இறங்கி தேசத்தின் அதிக வெற்றிகளுக்கு பங்களிக்க முடியும் என நம்புவதாக மோடி கூறியுள்ளார்.

Related posts: