தவறை ஏற்றுக்கொண்டார் தன்வீர் அஹமட்!

Monday, December 24th, 2018

பங்களாதேஸ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது இருபதுக்கு 20 போட்டியின் போது எழுந்த நோபோல் சர்ச்சை தொடர்பில், தம்மில் தவறு இருப்பதாக போட்டியின் நடுவர் தன்வீர் அஹமட் ஒப்புக்கொண்டுள்ளார்.

பங்களாதேஸைச் சேர்ந்த நடுவரான தன்வீர், கடந்த போட்டியின் நான்காவது ஓவரில் ஓசேன் தோமஸ் வீசிய பந்தினை முறையற்றது என்று அறிவித்தார்.

எனினும் அந்த பந்தினை வீசும் போது தோமசின் பாதம், பந்து வீசும் எல்லைக் கோட்டுக்கு பின்னால் இருந்தது.

இது தொடர்பில் மீளாய்வு செய்யப்படவும் இல்லை.

இருப்பினும் தாம் சர்வதேச போட்டிகளுக்கு புதிது என்பதால் இந்த தவறு நேர்ந்துள்ளது என்று நடுவர் தன்வீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

Related posts: