தலைவர் பதவியை துறக்கும் மலிங்கா

Tuesday, March 8th, 2016

இலங்கை T20 அணியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார் லசித் மலிங்கா.

ஆசியக்கிண்ண T20 தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்ற மலிங்கா, காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடவில்லை.

இந்நிலையில் காயம் காரணமாக இலங்கை T20 அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை மலிங்கா கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால் அவரின் கோரிக்கை ஏற்றுக் கொள்ள முடியாதவாறு இருப்பதாக தெரிவித்த கிரிக்கெட் வாரியம், இது தொடர்பில் இறுதி முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

Related posts: