தலைவர் பதவியை கொடுக்க தயாரான மேத்யூஸ்!

Friday, June 24th, 2016

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியை சிறப்பாக வழிநடத்த டி20 போட்டிகளின் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க தயாராக இருப்பதாக மேத்யூஸ் சூசகமாக தெரிவித்துள்ளார்.

மலிங்கா டி20 போட்டிகளின் தலைவர் பதவியில் இருந்து விலகியதையடுத்து மேத்யூஸ் டி20 அணியின் தலைவராக அறிவிக்கப்பட்டார். தற்போது 3 வகையான கிரிக்கெட் அணிக்கும் அவரே தலைவராக இருக்கிறார்.

2009ல் டி20 போட்டிக்கு மேத்யூஸ் அறிமுகமானாலும், அவர் விளையாடிய 65 போட்டிகளில் 9 போட்டிகளுக்கு மட்டுமே தலைவராக இருந்துள்ளார்.

இந்நிலையில் தகுதியான நபர் ஒருவர் கிடைக்கும் போது டி20 அணியின் தலைவர் பதவியில் இருந்து தான் விலகிவிடுவேன் என்று மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேத்யூஸ் அளித்த பேட்டியில், ஒருவர் டி20 அணிக்கு பொருத்தமான தலைவர் மற்றும் என்னை விட சிறப்பாக செயல்படுவார் என்று நான் நினைக்கும் போது, தெரிவாளர்களிடம் ஆலோசனை செய்துவிட்டு தலைவர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்.எவர் ஒருவர் சிறப்பான செயல்பாடுடன், சவாலை சந்திக்க தயாராக இருக்கிறாரோ அவரிடம் நான் எனது தலைவர் பதவியை ஒப்படைத்து விடுவேன் என்று கூறியுள்ளார்.

Related posts: