தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் புதியவர்!

இலங்கை கிரிக்கட் அணியின் தற்காலிக தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஹஷான் திலகரட்ன அல்லது ருமேஷ் ரத்னாயக்கவை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது போட்டித் தொடருக்காக பிரதான பயிற்றுவிப்பாளராக இவர்களின் ஒருவர் நியமிக்கப்படுவார் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயற்படும் நிக் போதாஸ் பாகிஸ்தானுடனான இருபதுக்கு இருபது தொடரில் இருந்து விலகியுள்ளார்.இதன்காரணமாக குறித்த வெற்றிடத்தை பூர்த்தி செய்வதற்காக ஹஷான் திலகரட்னவை அல்லது ருமேஷ் ரத்னாயக்கவை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிரிக்கட் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
Related posts:
291 ஓட்டங்களில் சுருண்டது இலங்கை அணி!
தொடருமா ரஷ்யாவின் வெற்றி! - எகிப்து அணியுடன் இன்று மோதல்!
துடுப்பாட்டத்தில் ஸ்கந்தவரோதயக் கல்லுாரி அணி சாதனை!
|
|