தலைக்கனம் இருக்க கூடாது – ஐபிஎல்லில் சாதிக்கும் வில்லியம்சின் !

Thursday, May 10th, 2018

போட்டியின் போது தலைவர் என்ற எண்ணம் இருக்க கூடாது , சக வீரனாக வெற்றிக்கு போராட வேண்டும் என  ஐபிஎல் தொடரில் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள ஹைதராபாத் அணியின் தலைவர் வில்லியம்சன் கூறியுள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் யாரும் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு மிகவும் அபாயகரமாக அணியாக உருவெடுத்து வருகிறது ஹைதராபாத் அணி.

புள்ளிப் பட்டியலில் 10 போட்டிகளில் 2-ல் மட்டுமே தோல்வி 8-ல் வெற்றி என 16 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்ததோடு, முதல் ஆளாக 2018-ஆம் ஆண்டிற்கான பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் வில்லியம்சன் அணியை சிறப்பாக வழி நடத்திச் செல்வது தான், இந்நிலையில் வில்லியம்சன், தலைவர் பொறுப்பில் இருக்கின்றோம் என நினைத்து செயல்பட்டால், ஒன்றும் சாதிக்க முடியாது. தலைவர் என்பவர் அணியின் ஒரு வீரர் தான்.

களத்தில் சென்று ஒரு வீரராக அணியின் வெற்றிக்கு எவ்வளவு போராட வேண்டுமோ, அவ்வளவு போராடினால் தான் வெற்றி கிடைக்கும். பாரபட்சம் இல்லாமல், சரியான நேரத்தில் சரியான வீரரை பயன்படுத்த வேண்டும். அதைவிடுத்து தலைவர் என்ற தலைக்கணத்துடன் செயல்பட்டால் வீணாக போய் விடுவோம் என்று கூறியுள்ளார்.

Related posts: