தற்போதைய சுழல்பந்து வீச்சாளர்களிடத்தில் சோதனை செய்தால் பலர் தோல்வியடைவர்.!

Sunday, December 3rd, 2017

தற்போதுள்ள சுழல்பந்து வீச்சாளர்களிடத்தில் அவர்களின் பந்துவீச்சு விதிமுறைகளுக்கு உட்பட்டு உள்ளதா என்று சோதனை செய்தால் பலர் தமது சோதனையில் தோல்வியடைவார்கள் என்று தெரிவித்தார் பாகிஸ்தானின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் அஜ்மல்.

பன்னாட்டு அரங்கில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஓய்வை அறிவித்துச் சென்றார் அஜ்மல். தான் விளையாடும் காலத்தில் பன்னாட்டு கிரிக்கெட்சபையால் அனுமதிக்கப்பட்ட பந்து வீச்சு முறைமைக்கு முரணாக உள்ளது என்று தெரிவித்து இரண்டு தடவைகள் அஜ்மல் தடை செய்யப்பட்டார். பின்னர் அணியிலிருந்து நீக்கப்பட்ட அவர் களத்துக்குத் திரும்பாமலேயே தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இதையடுத்தே அஜ்மல் இவ்வாறு தெரிவித்தார்.

பன்னாட்டு கிரிக்கெட் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைக்கு அமைவாக இன்றுள்ள சுழல்பந்து வீச்சாளர்கள் பந்து வீசுகின்றனரா என்று சோதித்துப்பார்த்தால் 90 வீதமானவர்களின் பந்து வீச்சு தோல்வியிலேயே முடிவடையும் என மேலும் அஜ்மல் தெரிவித்தார்.

Related posts: