தற்போது உள்ள பந்து வீச்சாளர்கள் எதை விரும்புகிறார்கள்? இலங்கை வீரர்!  

Saturday, June 24th, 2017

இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் தொடரின் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வியை சந்தித்து வெளியேறியது.

அந்த போட்டியில் இலங்கை வீரர்கள் எளிதாக கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் கோட்டைவிட்டனர். இதனால் இலங்கை ரசிகர்கள் இன்னும் அதிலிருந்து மீளாமல் உள்ளனர். இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான சமிந்தா வாஸ், பந்து வீச்சாளர்கள் பற்றி கூறியுள்ளார். கிரிக்கெட் போட்டியில் மூன்று வித தொடர்கள் உள்ளன.

அதில் டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டி என மூன்று தொடர்கள் உள்ளது.இந்த மூன்று தொடரில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். ஒரு பந்து வீச்சாளர் டெஸ்ட்டில் நன்றாக விளையாடலாம், மற்றொரு பந்து வீச்சாளர் ஒரு நாள் போட்டியில் சிறப்பாக வீசலாம், இதைத் தொடர்ந்து சில பந்து வீச்சாளர்கள் டி20 தொடரில் சிறப்பாக வீசலாம்.

ஆனால் தற்போது உள்ள வீரர்களில் பெரும்பாலானோர் டி20 போட்டிகளிலே விளையாட ஆர்வம் காட்டுகின்றனர். ஏனெனில் அப்போட்டியில் ஒரு பந்து வீச்சாளருக்கு நான்கு ஓவர் தான், மொத்தத்தில் 20 ஓவர். அதற்கான பயிற்சி நேரமும் குறைவாக தேவைப்படுவதால், டி20 தொடரையே விரும்புகின்றனர்.

ஆனால் கிரிக்கெட்டை விரும்புபவர் டி20 போட்டிகளில் விளையாடுவதை விட, எந்த போட்டி அதிக நேரம் எடுக்குமோ அந்த போட்டியிலே விளையாட விரும்புவர் என்று கூறியுள்ளார். அதாவது டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள்

Related posts: