தற்கொலைக்கு முயற்சித்த இந்திய வீரர்!

Friday, July 29th, 2016

ஊக்கமருந்து சோதனையில் சிக்கி ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்த இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் தற்கொலைக்கு முயன்றதாக அவரது நண்பர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் 120 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.முன்னதாக ஆடவர் 74 கிலோ எடைபிரிவு மல்யுத்த போட்டியில் பங்கேற்க இந்திய வீரர் நர்சிங் யாதவ் தகுதி பெற்றிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஸ்டீராய்டு மருந்து உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து அவரின் ஒலிம்பிக் கனவு தகர்ந்து போனது. இதனால் அவர் மிகவும் மனமுடைந்து போனார்.இந்த நிலையில் மிகவும் வெறுப்படைந்த நர்சிங் யாதவ் தற்கொலைக்கு முயற்சித்ததாக அவரது நண்பர் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், நர்சிங் மிகவும் கஷ்டப்பட்டு இந்த நிலையை அடைந்தார். ஆனால் இப்படி அவமதிக்கப்படுவார் என்று அவர் நினைக்கவில்லை. இதனால் மிகவும் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கே சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.

Related posts: