தற்கொலைக்கு முயன்றாரா குல்தீப் யாதவ்!

Thursday, November 16th, 2017

இந்திய கிரிக்கட் அணியின் குல்தீப் யாதவ், தனது 13வது வயதில் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கட் அணியின் முதல் சைனாமேன் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சைனாமேன் பந்துவீச்சு என்பது வலது கை துடுப்பாட்ட வீரர்களுக்கு  ஆப் ஸ்பின்னாகவும்  இடது கை துடுப்பாட்ட வீரர்களுக்கு லெக் ஸ்பின்  முறையிலும் வீசக்கூடிய அரிய முறையாகும்.

இப்படி பந்துவீசும்  பந்துவீச்சாளர்கள் சர்வதேச அரங்கில் மிகவும் அரிதாகவே உள்ளனர்.இந்த பந்துவீச்சு முறையை கற்றுக்கொண்ட இந்தியா பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், தற்கொலை செய்ய முயற்சித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது

இதுகுறித்து குல்தீப் யாதவ் கூறுகையில்  எனது 13வது வயதில், உத்தர பிரதேச 15 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் தேர்வாக மிகவும் கடினமாக பாடுபட்டேன் ஆனால் என்னை தேர்வுக்குழுவினர் தேர்வு செய்யவில்லை. அது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது.அதனால் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தேன்.

பின் அதில் இருந்து மீண்டு எனது தந்தையின் உதவியால், மீண்டும் அணியில் இடம் பிடிக்க முயற்சித்தேன். நான் அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஷேன் வார்னின் தீவிர ரசிகர் அவரது பந்துவீச்சை மிகவும் நுணுக்கமாக கவனிப்பேன்.அவர் பந்தை பிடிக்கும் முறையும், பந்தை வெளியிடும் முறையும் வேறு யாராலும் முடியாத விஷயம்  என்றார்

Related posts: