தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்தும் முதலிடம்!

Tuesday, March 14th, 2017

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில்   அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் 936 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்  சதம் அடித்த நியூஸிலாந்து அணித்தலைவர்  வில்லியம்சன் 869  புள்ளிகளுடன்  இரண்டாவது இடத்திலும்  இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் 848 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளனர்.  3-வது இடத்தில் இருந்த விராட் கோலி தற்போது 847 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் எவ்வித மாற்றமுமின்றி  அஸ்வின், ஜடேஜா ஆகியோர் முதலிடத்தில் நீடிக்கின்ற அதேவேளை சகலதுறை ஆட்டக்காரர்  தரவரிசை பட்டியலில் 434 புள்ளிகளுடன் அஸ்வின்  முதலிடத்திலும்   பங்களாதேசின்  ஷாகிப் அல் ஹசன் 403 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர்.

Related posts: