தரவரிசையில் முன்னேறினார் பெடரர் !

Friday, March 24th, 2017

பரிபாஸ் டென்னிஸ் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 4 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார்.

18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ரோஜர் பெடரர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் நடைபெற்ற பிஎன்பி பரிபாஸ் டென்னிஸ் தொடரில் சக நாட்டைச் சேர்ந்த வாவ்ரிங்காவை வீழ்த்தி 5-வது முறையாக சம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.

இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, செர்பியாவின் ஜோகோவிச், சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா, ஜப்பானின் நிஷிகோரி, கனடாவின் மிலோஸ் ரயோனிச் ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர். ஸ்பெயினின் ரபேல் நடால் 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆஸ்திரியாவின் டொமினிக் தியம், குரோஷியாவின் மரின் சிலிச், பிரான்சின் சோங்கா ஆகியோர் முறையே 8 முதல் 10-வது இடங்களில் உள்ளனர்.

மகளிர் பிரிவில் ஜெர்மனி யின் ஏஞ்சலிக் கெர்பர் மீண்டும் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். பிஎன்பி பரிபாஸ் டென்னிஸ் தொடரில் விளையாடாததால் அமெரிக்கா வின் செரீனா வில்லியம்ஸ் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Related posts: