தரவரிசையில் முதல் இடத்தை இழக்கும் அபாயத்தில் அவுஸ்ரேலியா!

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மிகத்துல்லியமான புள்ளிகள் அடிப்படையில் அவுஸ்ரேலியா முதல் இடத்தை பிடித்துள்ளது. அந்தவகையில்,அவுஸ்ரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்கா தலா 118 புள்ளிகள் பெற்று அடுத்ததடுத்த இடத்தில் உள்ளது.
தென்ஆப்பிரிக்கா – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிற நிலையில், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற அடிப்படையில் தென்ஆப்பிரிக்கா தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், தென்ஆப்பிரிக்கா அணி கடைசி இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று இலங்கையை 5-0 என ஒயிட்வாஷ் செய்யும் பட்சத்தில், அவுஸ்ரேலியாவை பின்னுக்குத் தள்ளி தென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் முதல் இடத்தை பிடிக்கும் வாய்ப்பை பெறும். அவுஸ்ரேலியாவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து 2-0 எனக் தொடரை கைபற்றியுள்ளதால் நியூசிலாந்து அணி 113 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. இந்தியா 112 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளதோடு, 107 புள்ளிகயுடன் 5வது இடத்தில் இங்கிலாந்தும், 99 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இலங்கையும் காணப்படுகின்றது.
Related posts:
|
|