தரவரிசையில் முதலிடம் பெற்ற யாசீர் ஷா!
Wednesday, July 20th, 2016சர்வதேச கிரிக்கெட் சபையால் வெளியிடப்படும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில், டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் முதலிடத்தை, பாகிஸ்தான் அணியின் யாசீர் ஷா பிடித்துள்ளார்.
இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது போட்டியைத் தொடர்ந்து, புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதிலேயே, முதலாவது போட்டியில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஷா, நான்காவது இடத்திலிருந்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இப்போட்டியில் விளையாடியிருக்காத இங்கிலாந்தின் ஜேம்ஸ் அன்டர்சன், முதலிடத்திலிருந்து மூன்றாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார். ஸ்டுவேர்ட் ப்ரோட், 3ஆவது இடத்திலிருந்து 4ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளார்.
துடுப்பாட்ட வீரர்களில் 5ஆவது இடத்தில் காணப்பட்ட யுனிஸ் கான், 6ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட, 10ஆவது இடத்தில் காணப்பட்ட மிஸ்பா உல் ஹக், 9ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
துடுப்பாட்டத் தரவரிசை (முதல் 10 இடங்கள்):
1.ஸ்டீவன்ஸ்மித்
2.கேன்வில்லியம்ஸன்
3.ஹஷிம்அம்லா
4.ஜோறூட்
5.ஏபிடிவில்லியர்ஸ்
6.அடம்வோஜஸ்,
7.யுனிஸ்கான்
8.டேவிட்வோணர்
9.மிஸ்பாஉல்ஹக்
10. அஞ்சலோ மத்தியூஸ்.
பந்துவீச்சுத் தரவரிசை (முதல் 10 இடங்கள்):
1.யாசீர்ஷா
2.இரவிச்சந்திரன்அஷ்வின்
3.ஜேம்ஸ்அன்டர்சன்
4.ஸ்டுவேர்ட்ப்ரோட்
5.டேல்ஸ்டெய்ன்
6.ரவீந்திரஜடேஜா
7.ட்ரென்ட்போல்ட்
8.ஜொஷ்ஹேஸல்வூட்
9.மோர்னிமோர்க்கல்
10. வேர்ணன் பிலாந்தர்.
Related posts:
|
|