தரவரிசையில் முதலிடம் பிடிக்குமா இந்தியா!

நியூசிலாந்து அணியுடன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ள 2ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால், டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறும் என ஐ.சி.சி அறிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடம் பிடிக்க முன்னணி அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. பலம் வாய்ந்த தென்னாபிரிக்க, அஸ்திரேலிய அணிகள் பின்தங்கியுள்ள நிலையில், பாகிஸ்தான் 111 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. இளம் வீரர் விராத் கோஹ்லி தலைமையிலான இந்தியா (110 புள்ளி) 2ஆவது இடத்தில் உள்ளது.
கான்பூரில் நடந்த முதல் டெஸ்டில் 197 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றதால் இந்திய அணி மீண்டும் முதலிட அந்தஸ்தை பெறும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.நாளை கொல்கத்தாவில் ஆரம்பமாகும் இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றினால் இந்தியா முதலிடத்துக்கு முன்னேறுவது உறுதி என ஐ.சி.சி அறிவித்துள்ளது.
இந்த டெஸ்ட் இந்தியா சொந்த மண்ணில் விளையாடும் 250ஆவது டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|