தரவரிசையில் முதலிடத்தை பகிர்ந்த அஸ்வின்-ஜடேஜா!

Thursday, March 9th, 2017

டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், இந்தியாவின் சுழற்பந்து வீச்சார்களான அஸ்வின் மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகிய இருவரும் முதலிடத்தை பகிர்ந்துள்ளனர்.

நடைபெற்று முடிந்த அவுஸ்ரேலிய அணிக்கெதிரான இரு டெஸ்ட் போட்டிகளிலும் விக்கெட்டுகளை வாரி குவித்த இருவரும் 892 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளனர்.

சுழற்பந்து வீச்சாளர்கள் இருவர் முதலிடம் வகிப்பது இதுவே முதல்முறை. அத்தோடு, ஜடேஜா முதல்முறையாக தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

புனேயில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், அஸ்வின் இரு இன்னிங்ஸிலும் 7 விக்கெட்டுகளையும், ஜடேஜா இரு இன்னிங்ஸிலும் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மேலும் பெங்களூரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரு இன்னிங்ஸிலும் இருவரும் தலா 8 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், அவுஸ்ரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் 863 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் 827 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 821 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.

Related posts: