தரப்படுத்தலில் ஸ்டுவேர்ட் புரோட் இரண்டாம் இடம்!

Wednesday, August 23rd, 2017

இங்கிலாந்தின் பந்துவீச்சாளர்கள் தரப்படுத்துதலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி இருக்கும் ஸ்டுவேர்ட் புரோட், 2019 இலும் இங்கிலாந்து அணிக்காக விளையாட வேண்டுமென்ற தன் ஆர்வத்தை வெளியிட்டுள்ளார்.

31 வயதாகி விட்ட இவர், மேற்கிந்திய அணிக்கெதிரான மோதலில் 7விக்கெட்டுகளை எடுத்து , மொத்தமாக 383 விக்கேட்டுகளுடன் , தரப்படுத்தலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறி இருந்தார் .

என்னால் இன்னும் நிறையக் காலம்  கிரிக்கெட் விளையாட முடியும் . இந்த விளையாட்டை மிகவும் அனுபவித்து விளையாடும் என்னால் இன்னும் சில வருடங்கள் தாக்குப் பிடிக்க முடியும் , 2019இல் விளையாடவுள்ள ஆஸி தொடரில் நானும் பங்கேற்க விரும்புகிறேன் என்று இவர் உற்சாகத்தோடு கூறி இருக்கிறார் .

2007இல் தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடி இருக்கும் இவர் இதுவரையில்  107டே டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.  இங்கிலாந்தின் வேகப் பந்துவீச்சாளர்களில் , 35 வயதான அன்டர்சன் மாத்திரமே  127 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, . புரோட்டை விட அதிகமான போட்டிகளில் பங்கேற்றுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது

 

Related posts: