தரங்கவின் தீர்மானம்!

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி வரை பாகிஸ்தானுக்கு எதிராக இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறவுள்ள இந்த டெஸ்ட் போட்டித்தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளன.அதில் , ஒரு டெஸ்ட் போட்டி பகல் இரவு போட்டியாக இடம்பெறவுள்ளது.
இதேவேளை , இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது அணித்தலைவர் உபுல் தரங்க , எதிர்வரும் 6 மாதங்களுக்கு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க முடியாது என அறிவித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் கவனத்தை செலுத்தும் முகமாக அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திமுத் கருணாரத்ன, கௌஷல் சில்வா , குசல் மென்டிஸ் ,தினேஷ் சந்திமால் – ,ஏஞ்சலோ மேத்யூஸ் ,லஹிரு திமன்னன,நீரோஷன் டிக்வெல்ல ,சதீர சமரவிக்ரம ,ரங்கன ஹேரத் ,சுரங்க லக்மால்,. நுவன் பிரதீப் ,லக்ஷான் சந்தகென்,. விஷ்வ பெர்னாண்டோ,லஹிரு குமார15. மிலிந்த சிறிவர்தன,ஜெப்ரி வென்டர்சே ,தனஞ்சய டி சில்வா ,துஷ்மந்த சமீர19. தில்ருவன் பெரேரா ,மலிந்த புஷ்பகுமார ,ரொசான் சில்வா ,அகில தனஞ்சய ,சரித் அஸலங்க ,ஷமிந்த எரங்க , தாம்மிக பிரசாத் ஆகியோர் இந்த குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Related posts:
|
|