தனேஷ், மதுஷன் அபார கோல்கள் யங்ஹென்றில் அசத்தல் வெற்றி!
Thursday, October 13th, 2016தனேஸ், மதுசன் ஆகியோரின் அபாரமான கோல்கள் மூலம் அந்தோனிபுரம் சென்.அன்ரனீஸ் அணியை தோற்கடித்து இளவாலை யங்ஹென்றிஸ் அணி. குப்பிளான் குறிஞ்சிக் குமரன் விளையாட்டுக் கழகம் வடமாகாண ரீதியில் நடத்திவரும் “வடக்கின் வல்லரசன்” உதைப்பந்தாட்ட தொடரின் சுப்பர் – 6 ஆட்டங்கள் மின்னொளியில் இடம்பெற்று வருகின்றன.
இத் தொடரில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஆட்டத்தில் இளவாலை யங்ஹென்றிஸ் அணியை எதிர்த்து மன்னார் அந்தோனிபுரம் சென்.அன்றனீஸ் அணி மோதியது. ஆட்டம் ஆரம்பித்து 2,3 ஆவது நிமிடங்களில் மதுசன் அடுத்தடுத்து கோல்களை ஹென்றிஸ் அணிக்கு பெற்றுக்கொடுத்து எதிரணியை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். 5,13 ஆவது நிமிடங்களில் தனேஷ் தனது பங்கிற்கு 2 கோல்களைப் பெற்றுக் கொடுத்தார். ஆனாலும் சளைக்காத சென்.அன்ரனிஸ் அணிக்கு 12,16 ஆவது நிமிடங்களில் ஆமோஸ் 2 கோல்களை போட்டு தனது அணியை உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து ஆட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் தனேஷ் மீண்டும் 19,21 ஆவது நிமிடங்களில் 2 கோல்களைப் பெற்றுக் கொடுக்க முதல் பாதியாட்டத்தில் யங்ஹேன்றிஸ் அணி 06.02 என முன்னிலை வகித்தது. 2ஆம் பாதியாட்டத்தில் இரு அணிகளும் விறுவிறுப்பாக ஆடிய போதும் கோல்களைப் போட முடியாமல் போனது. இறுதியில் 6:2 என்ற கோல் கணக்கில் யங்ஹென்றிஸ் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக தனேஷ் தெரிவு செய்யப்பட்டார்.
Related posts:
|
|