தனுஸ்க குணதிலக்கவிற்கு தடை!

விதிகளை மீறி செயற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு இலங்கை அணியின் வீரர் தனுஸ்க குணதிலக்கவிற்கு 6 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இந்திய அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் விதிகளை மீறி செயற்பட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இலங்கை கிரிக்கட்டின் ஒழுக்காற்று குழு, விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி பாகிஸ்தான் அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் போட்டிகளில் தனுஸ்க குணதிலக்க உள்வாங்கப்படவில்லை.மேலும் அந்த அணியில் லசித் மாலிங்க மற்றும் அஞ்சலே மத்தியூ ஆகியோர் உள்வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையைவிட சிறப்பாக பாகிஸ்தான் செயற்படும் - அசாட் சாபிக்
குணரத்ன , பிரசன்னவுக்கு இராணுவத்தில் உயர் பதவி!
IPL 2018 : ஏலத்தில் 39 இலங்கை வீரர்கள்!
|
|