தனது சாதனையை மீண்டும் முறியடித்தார் அனித்தா!

Monday, April 10th, 2017

இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தால் நடாத்தப்ட்ட திறந்த போட்டியாளர்களுக்கான தகுதிக்காண் போட்டியில் மாகாஜனக் கல்லூரியின் பழைய மாணவி அனித்தா தனது சாதனையை முறியடித்து புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

இத் தகுதிக்காண் போட்டிகள் நேற்று முன்தினம் கொழும்பு தியகம மகிந்த ராஜபக்‌ஷ மைதானத்தில் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அனித்தா 3.45 மீற்றர் உயரத்தைத் தாண்டி அகில இலங்கை ரீதியாக மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவர் கடந்த வருடம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய மட்டப் போட்டியில் 3.42 மீற்றர் உயரத்தை தாண்டி சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவருக்கான பயிற்றுவிப்பாளராக சி.கபாஸ்கரன் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: