தனஞ்சய டி சில்வா சதம் : மீண்டது இலங்கை!

Monday, November 7th, 2016

இலங்கை- சிம்பாப்வே அணிகள் மோதும் 2 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சிம்பாப்வே அணித்தலைவர் கிரிமர் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பத்தில் தடுமாற ஆரம்பித்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கருணாரத்னே (26), கெளஷால் சில்வா (37) ஓட்டங்களுடன் வெளியேற அடுத்து களமிறங்கிய குஷால் பெரேராவும் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்து இலங்கை அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

அதன்பின்னர் களமிறங்கிய குஷால் மெண்டிஸ் நிதானமாக ஆடி வந்த நிலையில் 26 ஓட்டங்களில் வெளியேறினார்.

இலங்கை அணி 112 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஜோடி சேர்ந்த உபுல் தரங்க, தனஞ்சய டி சில்வா அணியை சரிவில் இருந்து மீட்டனர்.இருவரும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் உபுல் தரங்க 79 ஓட்டங்களில் ஆட்டமிழந்து சதத்தை பெறும் வாய்ப்பினை தவறவிட்டார்.

மறுமுனையில் தொடர்ந்து அசத்திய தனஞ்சய டி சில்வா சதம் விளாசினார்.இன்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்கு 290 ஓட்டங்களை பெற்றுள்ளது.தனஞ்சய டி சில்வா 100 ஓட்டங்களுடனும், குணரத்னே 13 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

254637.3

Related posts: