தந்தை ஊக்கமளிக்காமல் இருந்திருந்தால் பொறியிலாளர் ஆகியிருப்பேன் -கிஷோர்

Monday, August 7th, 2017

தந்தை ஊக்கமளிக்காமல் இருந்திருந்தால் தான் பொறியிலாளர் ஆகியிருப்பேன் என தமிழ்நாடு பிரிமீயர் லீக் ரி-ருவென்ரி தொடரில் ஜொலித்துவரும் சேப்பாக் சுப்பர் கில்லீஸ் அணியின் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் தெரிவித்துள்ளார்.

காரைக்குடி காளை அணிக்கெதிரான நேற்றைய போட்டியில், 13 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்ததன் மூலம் இந்த தொடரில் சிறந்த பந்து வீச்சை பதிவுசெய்த அவர் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த 20 வயதான சாய் கிஷோர், “எனக்கு பக்கபலமாக இருக்கும் எனது குடும்பத்தினருக்கு இந்த விருதை சமர்ப்பிக்க விரும்புகிறேன். விளையாட்டு ஆர்வத்தை எனது தந்தை ஊக்கமளிக்காமல் இருந்திருந்தால் நான் பொறியிலாளர் ஆகியிருப்பேன். அணிக்காக எனது பணியை திறம்பட செய்வதில் கவனம் செலுத்துகிறேன்” என கூறினார்.

Related posts: