தடுமாறுகிறது பங்களாதேஷ்!

Monday, October 9th, 2017

தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிக் கொள்ளும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் 573 ஓட்டங்களைக் குவித்து தென்னாபிரிக்கா வலுவான நிலையில் உள்ளது.

பிளோயம்போன்டின் மைதானத்தில் நடைபெற்று வரும் குறித்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் களத்தடுப்பினைத் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய தென்னாபிரிக்க அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான டீன் எல்கர், மார்க்கிராம் ஆகியோர் நிதானம் கலந்த சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்

டீன் எல்கர் 113 ஓட்டங்களையும், மார்க்கிராம் 143 ஓட்டங்களையும் பெற்று அணியை வலுப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து முதல் நாள் ஆட்டநேர முடிவுடன் 428 ஓட்டங்களை தென்னாபிரிக்க அணி பெற்று கொண்டிருந்தது

முதல் நாள் ஆட்டநேர முடிவில் அம்லா 89 ஓட்டங்களுடனும், டு பிளிசிஸ் 62 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர் நேற்றைய 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கி தொடர்ந்தும் விளையாடிய அம்லா, டு பிளிசிஸ் ஜோடி சிறப்பாக துடுப்பெடுத்தாடி சதங்களையும் கடந்த நிலையில், அம்லா 132 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்

நான்கு சதங்களுடன் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 573 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், தென்னாபிரிக்கா 2ஆவது நாள் ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.

அதனைத் தொடர்ந்து பதிலுக்கு களமிறங்கிய பங்களாதேஷ் முதல் இன்னிங்சில் 147 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்த நிலையில் இரண்டாம் இன்னிங்சை தொடர்கின்றது.

Related posts: