தடுமாறுகிறது இந்தியா!

Saturday, January 6th, 2018

இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இடம்பெறவுள்ளது.

கேப்டவுனில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி, முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வரும் முன்னரே 286 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பில் ஏபிடி வில்லியர்ஸ் ஆகக்கூடுதலாக 65 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் புவனேஸ் குமார் 4 விக்கட்டுக்களையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.இதையடுத்து, தமது முதல் இன்னிங்ஸை நேற்று ஆரம்பித்த இந்திய அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கட்டுக்களை இழந்து 28 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

Related posts: