தடளகட வீரர் பிஸ்டோரியஸிற்கு மாரடைப்பு?

மாற்றுத்திறனாளி தடகள வீரரான தென்னாபிரிக்காவின் ஒஸ்கார் பிஸ்டோரியஸ், திடீர் நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது காதலியை கொலை செய்த குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பிஸ்டோரியஸிற்கு, நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இது மாரடைப்பாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள சிறைச்சாலை அதிகாரிகள், அவரை வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர்.
மணிக்கட்டுக்களில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் பிஸ்டோரியஸிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அவர் தற்கொலைக்கு முயன்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
தனது காதலியும் பிரபல மொடல் அழகியுமான ரீவா ஸ்டீன்கேம்பை கடந்த 2013ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று பிஸ்டோரியஸ் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவருக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு அவருக்கு அதிக பட்சமாக 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்து தீர்ப்பளிக்கப்பட்டது.இரு செயற்கை கால்களுடன், ஒலிம்பிக்கில் சாதாரண வீரர்களுடன் சேர்ந்து பங்கேற்ற முதல் மாற்றுத்திறனாளி வீரர் என்ற பெருமை பெற்றவரே ஒஸ்கார் பிஸ்டோரியஸ். அத்தோடு, மாற்றுத்திறனாளிகளுக்கான 400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் அவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|