தடகளப்போட்டியில் எம்.மனுஜாவிற்கு தங்கம்!

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகள போட்டியில் 20 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவு குண்டெறிதலில் மன்னார் நானாட்டான் மகா வித்தியாலயத்தை சேர்ந்த எம்.மனுஜா தங்கப் பதக்கத்தினை பெற்றுக்கொண்டார்.
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகள விளையாட்டு போட்டி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்று ஆரம்பமானது. இந்தப் போட்டிகள் எதிர்வரும் திங்கட்கிழமை வரை இடம்பெறவுள்ளது.
இந்த போட்டித்தொடரில் எம்.மனுஜா (7.96 மீற்றர் ) தங்கப் பதக்கத்தினையும் , தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியைச் சேர்ந்த எஸ்.தரணியா (7.78 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தினையும், பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த ப.அஜித்தா ( 7.58 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர்.
Related posts:
கிரிக்கெட் ஒப்பந்தம் சூதாட்டத்தை போன்றது!
ரோமனின் வரலாற்றை மாற்றியமைக்கவுள்ள சூரியக் கடிகாரம் !
சாதனையை தகர்த்தெறிந்த கப்டன் கூல்!
|
|