தடகளத்தில் பிரேசிலுக்கு முதல் தங்கம்!

Tuesday, August 16th, 2016

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில், கம்பு ஊன்றி தாண்டுதல் பிரிவு விளையாட்டில் (போல் வால்ட்) பிரேசில் போல் வால்ட் வீரர் தியாகோ பிராஸ் டா சில்வா, போட்டியை நடத்தும் பிரேசிலின் சார்பாக அந்நாட்டின் முதல் தடகள பிரிவு தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

மிகவும் பரபரப்பாக நடந்த இறுதி ஆட்டத்தில், 6.03 மீட்டர் உயரம் தாண்டி, தற்போதைய உலக சாதனையாளரான பிரான்சின் ரெனோ லெவ்லேனியின் சாதனையை முறியடித்து தியாகோ பிராஸ் டா சில்வா ஒலிம்பிக் சாதனையை முறியடித்துள்ளார்.

முன்னதாக, கென்யாவின் டேவிட் ருடிஷா தனது ஒலிம்பிக் 800 மீட்டர் ஓட்ட பட்டத்தை மீண்டும் தக்கவைத்துள்ளார். கடந்த 52 வருடங்களில், ஒலிம்பிக் 800 மீட்டர் ஓட்டப் பிரிவின் தங்கப்பதக்கத்தை மீண்டும் தக்க வைத்துள்ள முதல் நபர் தான்.

குத்துச்சண்டை போட்டி அதிக எடை பிரிவில், ரஷ்யாவின் எவ்ஜெனி டிஷ்சென்கோ கசக்ஸ்தான் நாட்டை சேர்ந்த வெசிலி லெவிட்டை புள்ளிகளின் அடைப்படையில் தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

Related posts: