தகுதிச் சுற்றில் விளையாடும் நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்படாது – அசார் அலி நம்பிக்கை!

Saturday, October 8th, 2016

2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள கிரிக்கெட் உலகக் கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணி தகுதிச் சுற்றில் விளையாடியே தகுதி பெறவேண்டும் என்ற நிலை ஏற்டாது என்றும் 2017ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 30ஆம் திகதிக்குள் பன்னாட்டுத் தரப்படுதலில் முதல் 7 இடத்தைப் பிடிக்கும் அந்த அணியின் தலைவரான அசார் அலி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கடந்த மாதம் மத்திய பகுதியில் வெளிவந்த தரப்படுத்தலில் 9ஆவது இடத்தை பிடித்திருந்தது. அண்மையில் முடிவடைந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றியதால் ஓர் இடம் முன்னேறி தற்போது 8ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த அணிக்கு இந்த வருடம் முடியும்வரை இனி ஒருநாள் ஆட்டங்கள் இல்லை.

டெஸ்ட் ஆட்டங்களுக்கான அட்டவணையே அதிகமுள்ளது. அடுத்த வருடத்தில் ஆஸ்த்திரேலியாவுடன் ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரையும் பாகிஸ்தான் கைப்பற்றினாலேயே தரப்படுத்தலில் முன்னேற்றம் கண்டு உலகக் கிண்ணத்திற்கு நேரடியாகத் தகுதி பெறும் என்று கருதப்படும் நிலையில் அசார் அலி நம்பிக்கை தெரிவித்தார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அதிகப்படியான சவாலுக்கு இந்தத் தொடர் ஒரு தொடக்கம்தான் அடுத்த வருடம் செப்ரெம்பர் மாதம் 30ஆம் திகதிவரை இதே முன்னெற்றத்துடன் செல்ல வேண்டும். நாங்கள் சிறந்த வீரர்களைப் பெற்று ஒருங்கிணைந்து செயற்படுகின்றோம். எற்கள் அணியின் புதிய வீரர்கள் ஆட்டத்தின் வெற்றியை நிர்ணயிக்க கூடியவர்களாக உள்ளனர் என அசார் அலி தெரிவித்தார்.

 col-azhar-ali_135935014_4848126_07102016_aff

Related posts: