டோனி முதல் முறையாக எடுத்த தவறான முடிவு!

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முன்னாள் தலைவர் டோனி எடுத்த முடிவு தவறாக போனது.
இலங்கை- இந்தியா இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
மூன்றாவது போட்டியில் குல்தீப் யாதவ் வீசிய 14வது ஓவரை சதிரா எதிர் கொண்டார்.இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில், சதிராவின் பேடில் பந்து பட்ட நிலையில், இந்திய வீரர்கள் நடுவரிடம் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் கேட்டனர், ஆனால் நடுவர் அவுட் கொடுக்கவில்லை.
எப்போதும் ரிவியூ முறையில் சரியாக முடிவெடுக்கும் முன்னாள் தலைவர் டோனி, இம்முறை இதை ரிவியூ செய்ய தவறினார். ஆனால், ரீப்ளேவில் சதிரா அவுட் ஆனது தெளிவாக தெரிந்தது.டோனியின் இத்தனை ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் டி.ஆர்.எஸ். முறையை முதல் முறையாக அவர் கணிக்க தவறியுள்ளார்
Related posts:
கிண்ணம் வெல்வதற்கு மலிங்காவின் அந்த உரை தான் காரணம்!
இலங்கை - பங்களாதேஷ் அணி மோதும் தீர்மானம் மிக்க போட்டி இன்று!
மீண்டும் இலங்கை அணியில் அஞ்சலோ மேத்யூஸ்!
|
|