டோனியின் பங்களிப்பை மறந்துவிடக்கூடாது: ஓய்வு குறித்து முடிவெடுக்க டோனிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் –  அசாருதீன்

Sunday, May 15th, 2016

எப்போது ஓய்வு பெறுவது என்பது குறித்து முடிவு எடுக்கும் சந்தர்ப்பத்தை டோனிக்கு வழங்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அசாருதீன் தெரிவித்துள்ளார்.

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் தலைவர் பொறுப்பில் இருந்து டோனியை மாற்றி விட்டு விராட் கோலியை நியமிக்க இதுவே சரியான தருணம் என்று இந்திய அணியின் முன்னாள் தலைவர் கங்குலி தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கையிலேயே அசாருதீன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அசாருதீன் மேலும் தெரிவிக்கையில் –

அது கங்குலியின் தனிப்பட்ட கருத்தாகும். அதனை நான் மதிக்கிறேன்.  எப்போது ஓய்வு பெறுவது என்பது குறித்து முடிவு எடுக்கும் வாய்ப்பை டோனிக்கு அளிக்க வேண்டும்.

அந்த வாய்ப்பு வழங்கப்படுவதற்கு டோனி தகுதியானவர். டோனி சிறந்த தலைவராக விளங்கி வருகிறார்.  அவரது தலைமையில் இந்திய அணி உலகக் கிண்ணப்போட்டிகளில் வென்று இருப்பதுடன், இந்தியா முதலாவது இடத்தையும் பிடித்தது.  எனவே, அவரது செயல்பாடுகளை நாம் மறந்து விடக்கூடாது என அவர் பதிலளித்துள்ளார்

Related posts: