டோனியின் சாதனையை முறியடித்த டி கொக்!

செஞ்சூரியனில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணியின் விக்கெட் காப்பாளரான குயின்டன் டி கொக் இந்திய அணியின் இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவரும், விக்கெட் காப்பாளருமான மகேந்திர சிங் டோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.
இப்போட்டியில், டி கொக் 87 பந்தில் 109 ஓட்டங்கள் குவித்தார். 36 ஓட்டத்தைதொடும்போது 3000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதன்மூலம் விக்கெட் காப்பாளராக விரைவாக 3000 ஓட்டங்களைத் தாண்டிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் டோனி 90 இன்னிங்சில் 3000 ஓட்டங்களைத் கடந்ததே சாதனையாக இருந்தது. தற்போது டி கொக் 74 இன்னிங்சில் 3000 ஓட்டங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார். அத்துடன் 3000 ஆயிரம் ஓட்டங்களைகள் குவித்த 2வது தென்னாப்பிரிக்க விக்கெட் காப்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் மார்க் பவுச்சர் இந்த சாதனையை பெற்றுள்ளார்.
Related posts:
|
|