டோனிக்கு பின்னணியில் இருப்பவர் யார்?

Wednesday, September 20th, 2017

இந்திய நட்சத்திர வீரர் டோனி வெளிப்படுத்தியுள்ள அபார ஆட்டத்தின் பின்னணியில் உறுதுணையாக இருப்பவர் குறித்து இந்தியாவின் முன்னாள் அணித்தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சவுரவ் கங்குலி கூறியதாவது, இந்த ஆண்டில் டோனி வெளிப்படுத்தியுள்ள அபார ஆட்டத்தின் புகழ் அனைத்தும் விராட் கோஹ்லியை தான் சென்றடையும்.ஏனென்றால் டோனி மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அணியில் விளையாட வைத்தவர் கோஹ்லி தான். டோனி இந்த ஆண்டில் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் கங்குலி புகழ்ந்துள்ளார்.

இதேபோன்று இளம் வீரரான பாண்டியா ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் என புகழ்ந்துள்ள கங்குலி, 10 ஆண்டுகளுக்கு மேல் பாண்டியாவும் தென் ஆப்பிரிக்க வீரர் கல்லீஸ் போன்று சிறந்த ஆல்ரவுண்டராக விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related posts: