டேவிட் வோர்னர் சதம் : ஆறுதல் பெற்றது அவுஸ்திரேலியா!

Saturday, September 30th, 2017

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 334 ஓட்டங்ளை பெற்றது. துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பாக டேவிட் வோர்னர் 124 ஓட்டங்களை பெற்றார்.

பதிலளித்தாடிய இந்திய அணி 50 ஒவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 313 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

Related posts: