டேரன் சமி நீக்கம்: டி20 அணியின் தலைவரானார் பிராத்வைட்!

Wednesday, August 10th, 2016

டி20 உலகக்கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் 4 சிக்சர்களை விளாசி மேற்கிந்திய தீவுகளுக்கு உலகக்கிண்ணம் வென்று கொடுத்த கார்லோஸ் பிராத்வைட் டி20 அணியின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதே சமயம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 2 முறை டி20 உலகக்கிண்ணத்தை வென்று கொடுத்த டேரன் சமி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது மட்டுமின்றி அணியில் இருந்தும் கழற்றி விடப்பட்டுள்ளார்.

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதற்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சகலதுறை வீரரான கார்லோஸ் பிராத்வைட் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டி20 மேற்கிந்திய தீவுகள் அணி விபரம்

அன்ட்ரே பிளெட்சர், அன்ட்ரே ரஸல், கார்லோஸ் பிராத்வைட், கிறிஸ் கெய்ல், வெயின் பிராவோ, எவின் லெவிஸ், ஜேசன் ஹோல்டர், ஜான்சன் சார்லஸ், கிரன் பொல்லார்டு, லென்டில் சிம்மன்ஸ், சாமுவேல்ஸ், சாமுவெல் பத்ரி, சுனில் நரைன்.

Related posts: