டெஸ்ட் போட்டியிலிருந்து ஜே.பி டுமினி ஓய்வு?

Sunday, September 17th, 2017

 

தென்னாபிரிக்க கிரிக்கட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஜே.பி டுமினி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறபோவதாக இன்று அறிவித்துள்ளார்

மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் அதிக கவனம் செலுத்தும் நோக்கிலேயே தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

கடந்த 2008ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான டுமினி, இதுவரையில் 46 போட்டிகளில் விளையாடியுள்ளார்

அத்துடன் அவர் 42 விக்கட்டுக்களையும் வீழ்த்தியுள்ளதுடன், அவரது துடுப்பாட்ட சராசரியாக 32.85 உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts: