டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

Saturday, June 2nd, 2018

டெஸ்ட் கிரிக்கெட் பாரிய ஆட்ட நிர்ணயச் சதி ஆபத்தை எதிர்கொள்கின்றது எனத் தெரிவித்துள்ள ஐ.சி.சி யின் தலைவர் டேவிட் ரிச்சட்சன் இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்டநிர்ணயச் சதி தொடர்பில் அல்ஜசீரா அம்பலப்படுத்திய விவகாரத்தினால் கிரிக்கெட் உலகம் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையிலேயே ஐ.சி.சி. தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

முன்னணி வீரர்களை நாங்கள் உன்னிப்பாக அவதானித்து வருவதால் ஆட்டநிர்ணய சதி முயற்சியில் ஈடுபடுபவர்கள் இளம் வீரர்களைக் குறி வைக்கின்றனர் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

அல்லது அவர்கள் ஆடுகளத் தயாரிப்பில் ஈடுபடுபவர்களை வளைக்க முயல்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை என்னவென்பது தெரியும் நாங்கள் அதற்கு எதிராகத் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப் போகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டே அதிக ஆபத்தை எதிர்நோக்குகின்றது. எனினும் பாதிப்பைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: