டெஸ்ட் போட்டிகளிலும் மாலிங்கவின் சேவை அவசியம் – க்ரஹம் ஃபோர்ட்!

Tuesday, February 28th, 2017

டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளிலும் வேகப்பந்து வீச்சாளர் மாலிங்கவின் சேவை அவசியம் என தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளர் க்ரஹம் ஃபோர்ட் இலங்கை டெஸ்ட் அணியில் மீண்டும் லசித் மலிங்க இணைய வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

உபாதை காரணமாக ஓய்வில் இருந்த லசித் மலிங்க, அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இருபதுக்கு20 கிரிக்கட் போட்டித் தொடரில் மீண்டும் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருபதுக்கு20 கிரிக்கட் போட்டிகளில் அவர் மீண்டும் இணைந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது எனவும் மலிங்கவின் வருகை வரையறுக்கப்பட்ட ஒவர் கிரிக்கட் போட்டிகளில் இலங்கை அணியை வலுவடையச் செய்யும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

லசித் மாலிங்க டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என க்ரகம் ஃபோர்ட் குறிப்பிட்டுள்ளார்.

Graham-ford

Related posts: