டெஸ்ட் புதிய தரவரிசையில் 2வது இடத்தில் யூனுஸ்!

டெஸ்ட் போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரப்படுத்தலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. நடைபெற்று முடிந்த, பாகிஸ்தானுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்தே, இந்தத் தரப்படுத்தல் வெளியாகியுள்ளது.
புதிய தரப்படுத்தலின்படி, துடுப்பாட்டத்தில் இரண்டாவது இடத்துக்கு, பாகிஸ்தானின் சிரேஷ்ட வீரர் யுனிஸ் கான் முன்னேறியுள்ளார். 2ஆவது போட்டியில் சதம் பெற்றதைத் தொடர்ந்தே, 5ஆவது இடத்திலிருந்து முன்னேறி, அவர் இந்த இடத்தைப் பெற்றுள்ளார். முதலிடத்தில், அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித், தொடர்ந்தும் காணப்படுகிறார்.
15ஆவது இடத்தை செற்றேஸ்வர் புஜாராவுடன் பகிர்ந்துகொண்டுள்ள இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மத்தியூஸே, இலங்கை வீரர்களின் முன்னிலையில் காணப்படுகிறார். 18ஆவது இடத்தில், டினேஷ் சந்திமால் காணப்படுகிறார். ஆனால், இவர்களிருவருமே, சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க மாட்டார்கள்.
முதல் 10 இடங்களிலுள்ள வீரர்கள்: ஸ்டீன் ஸ்மித், யுனிஸ் கான், ஜோ றூட், ஹஷிம் அம்லா, கேன் வில்லியம்ஸன், அஜின்கியா ரஹானே, அடம் வோஜஸ், ஏபி.டி.வில்லியர்ஸ், டேவிட் வோணர், மிஸ்பா உல் ஹக். (இதில் அடம் வோஜஸும் ஏபி.டி.வில்லியர்ஸும், 7ஆவது இடத்தைப் பகிர்ந்துள்ளனர்.
பந்துவீச்சாளர்களுக்கான தரப்படுத்தலில், 5ஆவது இடத்துக்கு, யாசீர் ஷா முன்னேறியுள்ளார். இரண்டாவது போட்டியில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவர், 6ஆவது இடத்திலிருந்து ஒரு படி முன்னேறி, 5ஆவது இடத்தை, ஸ்டுவேர்ட் ப்ரோடுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
முதல் 10 வீரர்கள்: இரவிச்சந்திரன் அஷ்வின், டேல் ஸ்டெய்ன், ஜேம்ஸ் அன்டர்சன், ரங்கன ஹேரத், ஸ்டுவேர்ட் ப்ரோட், யாசீர் ஷா, இரவீந்திர ஜடேஜா, மிற்சல் ஸ்டார்க், நீல் வக்னர், வேர்ணன் பிலாந்தர்.
Related posts:
|
|