டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரப்படுத்தலில்  கேன் வில்லியம்ஸன் முன்னேற்றம்!

Wednesday, December 12th, 2018

டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரப்படுத்தலில் 900 புள்ளிகளைக் கடந்த முதலாவது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை, கேன் வில்லியம்ஸன் பெற்றுள்ளார்.

அத்துடன் சர்வதேச அளவில் 900 புள்ளிகளைக் கடந்த 32ஆவது துடுப்பாட்ட வீரராகவும் அவர் பதிவாகியுள்ளார்.

அவுஸ்திரேலிய – இந்திய முதலாவது டெஸ்ட் போட்டியின் பின்னர் வெளியாக்கப்பட்டுள்ள சர்வதேச கிரிக்கட் தரவரிசைப் புள்ளிகளின் அடிப்படையில், இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி தொடர்ந்தும் முதல் இடத்தில் உள்ளார்.

ஆனாலும் அவர் 15 புள்ளிகளை இழந்து தற்போது 920 புள்ளிகளுடன் உள்ளார்.

தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ள உள்ள கேன் வில்லியம்ஸன் 913 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

இரண்டாம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள ஸ்டீவ் சுமித் 901 புள்ளிகளுடன் இருக்கிறார்.

நான்காம் இடத்தில் சட்டிஸ்வர் புஜாரா உள்ளார். ஐந்தாம் இடத்தில் ஜோ ரூட்டும், ஆறாம் இடத்தில் டேவிட் ஓனரும் உள்ளனர்.

அத்துடன் இலங்கை வீரர் திமுத் கருணாரத்ன 7ஆம் இடத்தில் உள்ளார்.

தென்னாபிரிக்காவின் டீன் அல்கர், நியூசிலாந்தின் ஹென்றி நிக்கலஸ் மற்றும் பாகிஸ்தானின் அசார் அலி ஆகியோர் 8ம், 9ம் மற்றும் 10ம் இடங்களில் உள்ளனர்.

Related posts: