டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைக் கைப்பற்றுமா இந்தியா!

Thursday, September 22nd, 2016

இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் இன்று ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடரில், இந்திய அணி வெற்றிபெறுமாயின், டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தை அவ்வணி கைப்பறவுள்ளது.

தற்போது இரண்டாமிடத்தில் காணப்படும் இந்திய அணி, 7ஆவது இடத்தில் காணப்படும் நியூசிலாந்தை, இந்தத் தொடரில் 1-0 என்ற கணக்கில் வென்றாலே, முதலிடத்தைக் கைப்பற்ற முடியும்.

ஆனால், 1-0 என வெற்றிபெறாமல், அதைவிடச் சிறப்பான முறையில் வெற்றிபெறுவதற்கே, இந்திய அணி முயலுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இந்தத் தொடரை 1-0 என்ற இந்திய அணி வெற்றிகொள்ளுமாயின், பாகிஸ்தானுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்குமிடையில் இடம்பெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி வென்று, முதலிடத்தை மீளக் கைப்பற்ற முடியும்.

ஆகவே, குறைந்தது 2-0 என்ற கணக்கில் வென்றாலே, முதலிடத்தைச் சிறிது காலத்துக்காகவாவது தக்க வைத்துக் கொள்ள இந்தியாவுக்கு முடியுமாக இருக்கும். மாறாக, 2-1 என்ற கணக்கில் இந்தத் தொடரை இந்தியா வென்றாலும் கூட, அதற்கடுத்த தொடரில் வைத்து, முதலிடத்தைப் பாகிஸ்தான் அணியால் மீளக் கைப்பற்ற முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.

VIRAT1_Liveday-450x300

Related posts: