டெஸ்ட் தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம்!

Wednesday, October 11th, 2017

தினேஷ் சந்திமால் தலைமையிலான இலங்கை டெஸ்ட் அணி தமது முதலாவது டெஸ்ட் தொடர் வெற்றியை பதிவுசெய்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக துபாயில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 68 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இலங்கை அணி, தமது முதல் இன்னிங்ஸில் 498 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 96 ஓட்டங்களையும் பெற்றது

பாகிஸ்தான் அணி, தமது முதல் இன்னிங்ஸில், 262 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 248 ஓட்டங்களையும் பெற்று 68 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.

இந்த வெற்றியின் ஊடாக தாம் எதிர்கொண்ட முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதுடன், 2க்கு 0 என்ற அடிப்படையில் தொடரையும் கைப்பற்றியது

இதேவேளை, ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற தொடரில் பாகிஸ்தான் அணி சந்தித்த முதலாவது தோல்வி இதுவாகும். இந்த தொடர் வெற்றியின் மூலம் டெஸ்ட் தரப்படுத்தலில் இலங்கை அணி ஒரு இடம் முன்னேறி ஆறாவது இடத்தை பிடித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது

Related posts: