டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மோர்கல் மோசமான சாதனை

Saturday, July 15th, 2017

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் மோசமான சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார்.

நடைபெற்றுமுடிந்த இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில்இ இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்சை மோர்னே மோர்கல் ஆட்டமிழக்க செய்தார். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் வீசிய பந்து நோபோலாக நடுவரால் அறிவிக்கப்பட்டது.

இதனால் அவர் நோ போலில் விக்கெட்டுகள் வீழ்த்திய எண்ணிக்கை 13 முறையாக உயர்ந்தது. இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் நோபோலில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனை தன்வசப்படுத்தியுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டிஇ நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: