டெஸ்ட் கிரிக்கெட்டை முன்னேற்ற பி.சி.சி.ஐ. கவனம் செலுத்தவில்லை – கவுதம் கம்பீர்!

பி.சி.சி.ஐ. யினால் குறைந்த ஓவர் போட்டிகளுக்கு கொடுக்கப்படும் கவனம் டெஸ்ட் போட்டிகளுக்கு கொடுக்கப்படுவதில்லை என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
ஒருநாள் இருபது- 20 போட்டிகளை மார்க்கெட்டிங் செய்வது போன்று டெஸ்ட் போட்டிகளை பி.சி.சி.ஐ மார்க்கெட்டிங் செய்வதில்லை. ஈடன் கார்டன் மைதானத்தில் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் எனது ஞாபகத்தில் இருக்கிறது. முதல் நாளில் இந்தியா துடுப்பாட்டம் செய்தபோது மைதானத்தில் 1000 பார்வையாளர்களே இருந்தனர்.
அன்றைய போட்டியில் சேவாக், சச்சின், ல~;மண், உள்ளிட்டோர் விளையாடிய போதும் பார்வையாளர்கள் மிகவும் குறைவாகவே இருந்தனர்.
எனவே குறைந்த ஓவர் போட்டிகளில் செலுத்தப்படும் கவனத்தை குறைத்து கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட் வலுவிழந்து வருகிறது.
இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவது சிவப்பு பந்துகளில் அதற்கு முன்பாக மட்டை பிட்ச்களில் வெள்ளை பந்தில் அங்கு ஒருநாள் இருபது ௲ 20 போட்டிகளில் ஆடுவது பயனில்லை.
சிவப்பு பந்துகளில் விளையாடுவது வேறு, வெள்ளை பந்தில் குறைந்த ஓவர் போட்டிகளில் விளையாடுவது வேறு. அங்கு விளையாடும் 3 ஒருநாள், 3 இருபது ௲ 20 போட்டிகள் டெஸ்ட் போட்டிக்கு தயாராக உதவாது என அவர் இந்திய கிரிக்கெட் சபையை கடுமையாகச் சாடியுள்ளார்.
Related posts:
|
|