டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் நான்கு நாள் டெஸ்ட் தொடர்!

சிம்பாவே மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகின்ற 26ம் திகதி போர்ட் எலிசபத் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதன் பிரகாரம் குறித்த போட்டியில் தினமும் 98 ஓவர்கள் வீசப்படும் என ஐ.சி.சி தெரிவித்துள்ளது.
இந்த நான்குநாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிக்கான ஒப்புதலை கடந்த அக்டோபர் மாதம் வழங்கியிருந்து. நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டி தொடர்ச்சியாக இடம்பெறாது எனவும், 2019 உலகக்கிண்ணம் வரை ஒரு ஒத்திகை போட்டியாக இது அமையும் எனவும். தரவரிசையில் புள்ளிகள் குறைவாக உள்ள அணிகளுக்கான வரப்பிரசாதமாகவே இந்த 4 நாட்கள் போட்டி அமையும் ஐ.சி.சி தலைமை நிர்வாகி டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்தார்.
Related posts:
ஐ.சி.சி சாம்பியன் கிண்ண பயிற்சிக்கு மத்தியூஸிற்கு அழைப்பு!
ஒரே அணிக்காக 400 கோல்கள் - ரொனால்டோ சாதனை!
துடுப்பாட்டத் தொடரில் யாழ்ப்பாணம் இந்து அசத்தலான வெற்றி!
|
|