டெஸ்ட் கிரிக்கட் போட்டிகள் மறைந்து வருகின்றன என்பதை ஏற்க முடியாது – டேவிட் ரிச்சட்சன்!
Saturday, March 2nd, 2019டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளுக்கான இரசிகர்கள் குறைந்து வருகின்றனர் என்ற கூற்றை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சர்வதேச கிரிக்கட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவிட் ரிச்சட்சன் அறிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கட் போட்டிகள் மறைந்து வருவதாக சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைவர் சஷாங்க் மனோகர் அண்மையில் கூறி இருந்தார். எனினும் இதனை ரிசர்ட்சன் மறுத்துள்ளார்.
கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கட் பேரவை நடத்திய ஆய்வின் படி, டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளுக்கு 700 மில்லியன் இரசிகர்கள் இருக்கின்றமை தெரியவந்துள்ளது. இந்த இரசிகர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது.
எனவே டெஸ்ட் கிரிக்கட் போட்டிகள் மறைந்து வருகின்றன என்பதை ஏற்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
T - 20 உலகக்கிண்ண தொடரில் அற்புதங்களை நிகழ்த்துவோம் - மேத்யூஸ்
அவுஸ்திரேலியாவை புரட்டி எடுத்த பங்களாதேஷ்!
தேசிய குத்துச்சண்டை போட்டியில் வட மாகாணம் முன்னேற்றம்!
|
|