டெல்லியை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி!

Tuesday, April 2nd, 2019

12ஆவது ஐ.பி.எல் தொடரின் 13ஆவது போட்டியில், டெல்லி கெப்பிடல்ஸ் அணியை எதிர்க் கொண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

மொஹாலியில் இடம்பெற்ற இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற, டெல்லி கெப்பிடல்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பதிலளித்தாடிய டெல்லி கெப்பிடல்ஸ் அணி 19.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 152 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.

Related posts: