டெல்லியை ஒரு ஓட்டத்தினால் வீழ்த்தியது பெங்களூர்!

Wednesday, April 28th, 2021


ஐ.பி.எல் தொடரின் 22வது போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 1 ஓட்டத்தினால் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் அணிகளுக்கிடையிலான இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கெப்பிடல்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து 172 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய டெல்லி கெப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை பெற்று 1 ஓட்டத்தினால் தோல்வியடைந்துள்ளது.
றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்பில் 75 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த ஏ.பி.டி டிவிலியர்ஸ் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

Related posts: